கேம்பிரீஜ் பல்கலைகழகதின் தமிழ் மொழி பரீட்சையில் உலகளவில் முதல் மதிப்பெண் பெற்ற இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலை மாணவி சித்தவி சபேசன்
Meiveli Media Team

இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலை மாணவியாகிய செல்வி சித்தவி சபேசன், கடந்த வருடம் 2025 இல் நடைபெற்ற கேம்பிரீஜ் பல்கலைகழகத்தின் உலகளாவிய ரீதியில் நடைபெறும் GCSE தமிழ் மொழி சாதாரணப் பரீட்சையில் தோற்றி அதி உயர் புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கேம்பிரீஜ் பல்கலைக் கழகம் Out standing student எனக் கௌரவித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. சித்தவி சபேசன் இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையில் பாலர் வகுப்பு முதல் தமிழ், வயலின், வாய்ப்பாட்டு என்பவற்றைக் கற்று வருகின்றார். தற்போது தமிழ் உயர்தர வகுப்பில் படித்து வரும் இவர் இயல்பாகவே கடின உழைப்பும் கல்வி, விளையாட்டு என அனைத்துத் துறையிலும் மிகுந்த ஆர்வமும் சிறப்பும் உடையவர் என்றும், பாடசாலையில் நடைபெறும் திருக்குறள் போட்டி நாவன்மைப் போட்டி, சொல்வதெழுதல் போட்டி என்பவற்றிலும் அதி உயர் புள்ளிகளைப் பெறுவதுடன், நுண்கலை சார்ந்த நிகழ்வுகளிலும் எப்போதும் உற்சாகத்தோடு பங்கேற்பதாக இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலை தலைமை ஆசிரியர் மாதவி சிவலீலன் தெரிவித்துள்ளார். மருத்துவர் சபேசன், யசோ அவர்களின் அன்பு மகளான சித்தவி சபேசனின் சாதனையை பாடசாலை நிர்வாகம் பாராட்டுவதோடு, இந்த வெற்றியை தங்களது வெற்றியாகக் கருதிப் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சித்தவி சபேசனின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் மொழி கற்றலின் மீது கொண்ட ஆர்வத்தை பாராட்டி அவரது வெற்றியை அவரது ஆங்கில பாடசாலையான Hockerill பள்ளி சமூகமும் பெருமைப்படுவதாக அறிவித்துள்ளது. கல்வியில் அவள் காட்டும் அர்ப்பணிப்பும் மொழிகளின் மீது கொண்ட உற்சாகமும், எங்கள் மாணவர்களிடம் ஊக்குவிக்கும் உயர்ந்த இலக்குகளையும் கல்வி சிறப்பையும் பிரதிபலிக்கின்றன என ஆங்கில பாடசாலை தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியில் ஆர்வம் செலுத்தி உலகளாவிய சாதனை படைத்த சித்தவி சபேசனுக்கு மெய்வெளி தொலைக்காட்சியும் இதயம் கனிந்த வாழ்த்துக்க ளை தெரிவித்துக் கொண்டு, வரவிருக்கும் தேர்வுகளில் வெற்றிபெற வாழத்துக்களை தெரிவித்து நிற்கினறது.

