மாலைதீவு கடலோர காவல்படை கப்பல் ‘HURAVEE’ நல்லெண்ண விஜயமாக கொழும்பு வருகை

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

​மாலைதீவு கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘HURAVEE’ எனும் ஆழ்கடல் ரோந்து கப்பல், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய கொழும்பு துறைமுகத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.

​48.9 மீற்றர் நீளம் கொண்ட இந்த Offshore Patrol Vessel வகை கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் அஹமட் நபியு முகமது (Lieutenant Colonel Ahmed Nafiu Mohamed) செயற்படுகின்றார். இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


​இக்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொழும்பு நகரில் உள்ள முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறான விஜயங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லுறவை பேணுவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.