அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை: பிரதமர் கீயர் ஸ்டார்மர் அறிவிப்பு

Meiveli Media Team

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை என பிரித்தானிய பிரதமர் கீயர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டமையானது, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ஈரான் மிகவும் துணிகரமான முறையில் தாக்குதல்களை நடத்த வழிவகுத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமேனியின் மரணம் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதிலிருந்து ஈரானை நிறுத்தாது என குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்களின் அணுகுமுறை முன்னரை விட மிகவும் துணிகரமானதாகவும், பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் மாறி வருகின்றது எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.