பொடி லெசி கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக ‘பொடி லெசி’ காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்…

