🚨 முக்கிய அறிவிப்பு: கொலையாளி குறித்த தகவல் தேடல்! 🚨
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கடந்த 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேகநபர் குறித்த விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபரின் அடையாளங்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன:
சந்தேகநபரின் விபரங்கள்:
உயரம்: சுமார் 5 அடி 5 அங்குலம்.
வயது: சுமார் 44 வயது.
நிறம்: கருமை கலந்த மாநிறம் (கண்களில் ஒருவித மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம் தென்படலாம்).
விசேட அடையாளம்: முகத்தின் வலது பக்க தாடைக்குக் கீழே ஒரு தழும்பு (வெட்டுக் காயம் போன்ற வடு) காணப்படுகிறது.
குறித்த சந்தேகநபரின் தற்போதைய தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பதை AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் உதவி தேவை!
மேற்குறிப்பிட்ட நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:
📞 பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மேல் மாகாண வடக்கு): 071 – 8598008
📞 பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி (நுகேகொடை): 071 – 8591641
📞 இயக்குனர் (மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு): 071 – 8592279
இந்தச் செய்தியைப் பகிர்ந்து குற்றவாளியைக் கண்டறிய உதவுங்கள்!



