உலகை உலுக்கிய அமெரிக்கா பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் கொடுமைகள் அனுபிவத்த பெண் வழங்கிய அதிர்ச்சித் தகல்கள்
Meiveli Media Team

உலகை உலுக்கிய அமெரிக்கா பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட 43 வயதான கேப் டவுன் பெண் ஒருவர், தனது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜெப்ரி எப்ஸ்டீனின் கடத்தல் கும்பல் ஆப்பிரிக்காவின் தெற்கு கடற்கரை வரை பரவியிருந்த நிலையில், 20 வயதான ஜூலியட் பிரையன்ட் என்பவரை தனி தீவுக்கு கடத்தியுள்ளனர். ஜெப்ரி எப்ஸ்டீன் இறக்கும் வரை தான் என்ன நடந்தது என்பதை தன் குடும்பத்தினரிடமோ அல்லது யாரிடமோ சொன்னதே இல்லை எனவும் தற்போது அது குறித்து கூறுவதாகவும் கூறியுள்ளார். கடந்த 2002-ல், முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவியாகவும், வளர்ந்து வரும் மோடலாகவும் இருந்த 20 வயதான ஜூலியட்டை, எப்ஸ்டீன் கேப் டவுனில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். தனது குடும்பம் நிதி ரீதியாக சிரமத்தில் இருந்தமையினால், தன் கனவுகள் நனவாகப் போகின்றன எனவும் தன் குடும்பத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் எப்ஸிடினுடன் சென்றதாக கூறியுள்ளார். இதேவேளை, எய்ட்ஸ் விழிப்புணர்வு பயணத்திற்காக கேப் டவுன் வந்திருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி மற்றும் கிறிஸ் டக்கர் ஆகியோருடன் ஒரு உணவகத்தில் எப்ஸ்டீனை முதன்முதலில் சந்தித்த மூன்று வாரங்களுக்குப் பின்னர், ஜூலியட் நியூயார்க்கிற்குப் பயணம் செய்துள்ளார்.
நியூயார்க் வந்த சில மணிநேரங்களிலேயே அவர் கரீபியன் தீவுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் நியூ ஜெர்சியில் உள்ள டெட்டர்போரோ விமான நிலையத்தில் ஒரு தனி விமானத்தில் அவர் ஏறியபோது, அங்கு எப்ஸ்டீனும், கேப் டவுனில் இவரை ஆள் சேர்த்த பெண்களும் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தீவுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரின் கடவுசீட்டுகளையும் பறித்து தீவிலிருந்து தப்பி செல்ல முடியாத அளவில் சிறைபிடித்து வைத்திருந்ததாக ஜூலியட் தெரிவித்துள்ளார். இதனால் அவர் தீராத மனவுளைச்சலையும் எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது எப்ஸ்டீனின் கோப்புகளில் உள்ள மின்னஞ்சல்கள் வெளியாகி எப்ஸ்டீன் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அது தன்னை உடல் ரீதியாகப் பாதிப்பதாக ஜூலியட் கூறுகிறார். இதேவேளை, 2008 விசாரணையின் போது எப்ஸ்டீனுக்கு ஆதரவாக ஜூலியட் அனுப்பிய மின்னஞ்சல்கள் சமீபத்தில் தணிக்கையின்றி வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறுகையில், ‘தான் குடிபோதையில் இருந்தபோதோ அல்லது மனமுடைந்து இருந்தபோதோ தான் அந்த மின்னஞ்சல்களை அனுப்பினேன் எனவும் அவர் எப்போதும் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பார் என்ற பயம் தனக்குள் இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

