ஐஎம்எப் இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை

Meiveli Media Team

 

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். டக்வா சூறாவளியின் தாக்கத்தை நேரடியாக கண்காணிப்பதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் மீட்பு முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் மீட்சித் தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.