அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழ் மக்களுக்கு காணி மற்றும் வீடுகளைக் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமும் மக்கள் மனு கையளிப்பும்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழ் மக்களுக்கு காணி மற்றும் வீடுகளைக் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமும் மக்கள் மனு கையளிப்பும்,
👉 ஜனவரி 28
👉 முற்பகல் 11 முதல்
👉ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெறுகிறது.

மலையகத் தமிழ் மக்களின்
காணி, வீடு, மாதாந்தச் சம்பளம் மற்றும் குடியுரிமையை
வெல்லும் வரை போராடுவோம்!

மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த கம்மடுவ கிராம மக்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்கெடெல் மற்றும் கொன்கோடியா ஆகிய கிராம மக்களே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு


