“சுத்தமான இன்று – பசுமையான நாளை ” எனும் பணியை மேற்கொள்ளும் இலங்கை விமானப்படை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

 

 

சுத்தமான இன்று – பசுமையான நாளை ” எனும் தொணிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவும் , ஐட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியுடன் ( Aitken Spence PLC ) இணைந்து மேற்கொள்ளும் ஒரு நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாகும்.
” Clean Sri Lanka ” தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுத்தமான இன்று – பசுமையான நாளை” திட்டம், இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைமையில், ஐட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இதில் ஒழுங்கற்ற கழிவு மேலாண்மை, மாசுபட்ட நீர்வழிகள் மற்றும் பசுமையான சூழலின் வீழ்ச்சி காரணமாக நாடு எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களை அங்கீகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடைமுறை தீர்வுகளை மேற்கொள்ளும் ஒரு தேசிய பொறுப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டமானது ஒருமுறை மட்டுமே செய்யப்படும் தூய்மைப்படுத்தும் திட்டமல்ல, நீண்டகால நிலையான திட்டமாகும். இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களின் சுற்றுச்சூழல் தொடர்பான தாக்கத்தை மதிப்பிடுகிறது, இவற்றில் கழிவு மேலாண்மை, படைத்தளங்களை சுத்தம் செய்தல், மரம் நடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த தோட்டக்கலை, நீர் பாதுகாப்பு போன்ற பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட இந்த திட்டத்தின் இறுதி தேர்வு விழா இன்று விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, ஏக்கல விமானப்படை தொழிற்பயிற்சி பாடசாலை அனைத்து வகையிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த தளத்திற்கான விருதை பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க, ஐட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் கலாநிதி ரோஹன் பெர்னாண்டோ, நிறுவனத்தின் அதிகாரிகள், விமானப்படை பணிப்பக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.