ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி குறித்துப் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனை சந்தித்தனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம்
ஆகியோர், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பாகப் பேசுவதற்காக இன்று (நவம்பர் 15, 2025) வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சிரேஷ்ட உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் இல்லத்துக்கு வருகை தந்தனர்.
வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்ததோடு.
இந்தச் சந்திப்பு, அரசாங்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.


