நல்லதை செய்தோம் நல்லதையே செய்வோம்” தனித் தமிழ் அணியாக முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் லாந்தர் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் – கே.ரி. குருசுவாமி

“நல்லதை செய்தோம் நல்லதையே செய்வோம்” என்ற கருப்பொருளைக் கொண்டதாக எங்களது தேர்தல் விஞ்ஞாபனம் காணப்படுகின்றது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழு இலக்கம் 04 லாந்தர் சின்னத்தில் போட்டியிடுகின்ற நாங்கள். ஒரு தனித் தமிழ் அணியாக முற்றிலும் சேவை மனப்பான்மை கொண்ட ஈமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்களை ஒன்றிணைத்துக் கொண்டு களமிறங்கியுள்ளோம் என முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.ரி. குருசுவாமி தெரிவித்தார்.

கே.ரி.குருசுவாமியை தலைவராகவும் பழ. புஸ்பநாதனை இணைத்தலைவராகவும் கொண்ட சுயேட்சை குழு இலக்கம் 04 லாந்தர் சின்னத்தில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

இந் நிலையில், அதன் நேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (22) வெளியிட்டு வைக்கப்பட்ட போது இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக் தெரிவிக்கையிலேயே சுயேட்சைக் குழு இலக்கம் 4 இன் தலைவர் கே.ரி. குருசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கே.ரி. குருசுவாமி.

இம் முறை நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சுயேட்சை குழு இலக்கம் 04 வாந்தர் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்றன, கொழும்பில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை 75 சதவீதம் நிறைவு செய்து விட்டன.

ஆனால் நாங்கள் இன்று தான் எங்களுடைய பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கின்றோம். இதற்குக் காரணம், எங்களுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையாகும். இதன் பின்னர் நாம் நீதிமன்றத்தின் மூலம் நியாயமான தீர்ப்பினை பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.

ஆகவே, நீதிமன்றம் சென்றதால் எங்களுக்காள சின்னம் கிடைப்பதற்கு தாமதமாகி விட்டது. இந்நிலையிலேயே கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்கான தேர்தல் பணிகளை நாங்கள் தற்போது ஆரம்பித்திருக்கிறோம்.

அந்த வகையிலே, சுயேட்சைக் குழு இலக்கம் 04 லாந்தர் சின்னத்தில் போட்டியிடுகின்ற நாங்கள் ஒரு தனித் தமிழ் அணியாக முற்றிலும் சேவை மனப்பான்மை கொண்ட சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்களை தேர்தலில் ஒன்றிணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.நிச்சயமாக எமது அணியில் போட்டியிடுகின்ற அனைவருமே தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையானவர்கள் ஆவர்.

பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் மக்கள் மத்தியில் நல்ல பெயர கிடையாது. ஊழல்வாதிகள், திருடர்கள், மக்களுக்கு சரியான சேவை செய்யாத சுயநலவாதிகள் என்றே மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே இதனை உடைத்தெறிவதற்காக இம்முறை எங்கள் அணியில் போட்டியிடுகின்ற அனைவரும் நல்லவர்களாகவும் சமூக சேவையில் அனுபவம் கொண்டவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

இன்றைய தினம் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்காக இந்த ஊடக சந்திப்பை நடாத்தியுள்ளோம். அந்த வகையில், ‘நல்லதை செய்தோம் நல்லதையே செய்வோம்” என்ற கருப்பொருளை கொண்டதாக எங்களது தேரதல் விஞ்ஞாபனம் காணப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபை என்பது 47 தொகுதிகளைக் கொண்டது. இந்த 47 தொகுதிகளிலும் எங்களது 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். தமிழ் மக்களை பொருத்தமட்டில் 2017 ஆம் ஆண்டிலிருந்து தொகுதி மற்றும் விகிதாசார முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 67 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதே நேரத்தில், இரண்டாவது பட்டியலில் 47 சேவை செய்கின்ற உறுப்பினர்களை இணைத்திருக்கின்றோம்.

ஆகவே கொழும்பில் வாழுகின்ற தமிழ் வாக்காளர்கள் லாந்தர் சின்னத்தில் இருக்கின்ற வேட்பாளர்களை அறியாதவர்களாக இருக்காலாம். ஆனால், மக்கள் லாந்தர சின்னத்திற்கு அளிக்கின்ற வாக்குகள், விகிதாசார முறைமையிலேயே கணக்கெடுக்கப்படும். கொழும்பு 01 தொடக்கம் 15 வரையிலான எல்லைக்குள் வசிக்கின்ற மக்கள் அளிக்கின்ற வாக்குகள் மொத்ததாக எண்ணப்படும்.

தொகுதியில் எங்களுக்கு சிலவேளை வெற்றி கிடைக்காவிட்டாலும் கொழும்பு மாநகர சபையில் எங்களுடைய லாந்தர் சின்னத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளின் பட்டியலில் இரண்டாவதாக நாங்கள் கொடுத்திருக்கும் பெயர்களின் அடிப்படையில் எங்கள் உறுப்பினர்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

ஒரு தொகுதிக்கு ஒருவர் தான் பணியாற்ற வேண்டும் என்ற கலாசாரத்தை இல்லாதொழிந்து ஆகக்குறைந்தது 10 அல்லது 15 உறுப்பினர்களை தேர்தலில் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

லாந்தர் சின்னத்திற்கு கிடைக்கின்ற மொந்த வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள், கொழும்பு 01 தொடக்கம் 15 வரை 47 தொகுதிகளுக்கும் சென்று பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்.

கொழும்பு மாநகர சபையை பொருத்த வரையில் சிங்கள் மக்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழுகின்றனர், கொழும்பு மாநகரிலே ஒரு மேயர் வர வேண்டும். இல்லாவிடின், ஒரு பெரும்பான்மையின் மேயர் கொழும்பு மாநகர சபையில் தெரிவாகும் போது, எங்களுடைய வாக்குகள் முறையாக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் பிரதி மேயராக வர முடியும்.

கடந்த காலங்களில் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் அதனை தமிழ் கட்சிகள் முறையாக பெற்றுக்கொண்டதா? என்பது கேள்விக்குறி

எமது அதிகபடியான விருப்பு வாக்குகளை மாற்று இனத்தவர்கள் பெற்றுக்கொண்டதால் எமக்கு கிடைக்க இருந்த மேவர் பதவி, பிரதி மேயர் பதவி கிடைக்க வில்லை.

இந்த முறை எமது தமிழ் மக்கள் லாந்தர் சின்னத்திற்கு வாக்களிப்பார்களானால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்போகும் எந்த ஒரு கட்சியும் லாந்தர் சின்னத்தின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை மாற்றி காட்டுவோம். எனவே 10 முதல் 15 உறுப்பினர்களை எமது அணியில் வெல்ல வைக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்.

30 ற்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபையில் இருக்க வேண்டுமானால், கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து தமிழ் உறுப்பினர்களும் வெற்றிபெற வேண்டும் என்பது எங்களது அவர், எனவே, தமிழ் உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வோம். ஊழல் அற்ற சேவையினை தமிழ் மக்களுக்கு நேர்மையாக செய்வோம் என்றார்