அயர்லாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 36-வது போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் பிளோரிடாவில் உள்ள மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் நாணய சுழற்சயி வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

இதனால் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியினை அபார பந்து வீச்சில் தடுமாறி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. டெலானியில் பொறுமையான ஆட்டத்தால் அயர்லாந்து அணி சற்று ஓட்டங்களை சேர்த்து. 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டெலானி 19 பந்துக்கு 31 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி, இமாட் வாசிம் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாகவே விளையாடியது.

ஆனால், அயர்லாந்து அணியின் நெருக்கடியான பந்து வீச்சால் போக போக பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் தடுமாறியது. அதன் பிறகு அணியின் கேப்டனான பாபர் அசாம் நிலைத்து நின்று பொறுமையாக தட்டி தட்டி அணியை கரை சேர்த்தார்.

மிகச்சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 34 பந்துக்கு 32 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதுவே பாகிஸ்தான் அணி சார்பாக ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். அயர்லாந்து அணி சார்பில் பாரி மெக்க்ரத்தி 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, இந்த தொடரில் கடைசியாக ஒரு ஆறுதல் வெற்றியையும் இதன் மூலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.