உலகக்கோப்பை அரையிறுதி: 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து முதலில் இறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா,சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
போட்டி தொடங்கியது முதல் ஒரு புறம் சுப்மன் கில் நிதானமாக விளையாட மறுபுறம் ரோஹித் ஷர்மா அதிரடி விளையாட அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி களமிறங்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 79 ஓட்டங்கள் எடுத்து திடீரென காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
இதைத்தொடர்ந்து கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். இவர்களின் விக்கெட்டை பறிக்கமுடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 117 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி தொடர்ந்து 67 பந்துகளில் சதத்தை அடித்து 105 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 ஓட்டம் எடுக்க , கே.எல்.ராகுல் 39* ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரன் இருவரும் களமிறங்கினர்.
இருவரும் ஆட்டம் தொடங்கிது முதல் நிதானமாக விளையாடி வந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஷமி வீசிய முதல் பந்தலையே டெவான் கான்வே 13 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க அடுத்து இரண்டு ஓவர் பிறகு மீண்டும் ஷமி பந்து வீச களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரன் கே.எல் ராகுலிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 39 ஓட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் டேரில் மிட்செல் , கேன் வில்லியம்சன் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். இருப்பினும் நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி சற்று திணறி வந்தது. இதில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் விளாசினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் சூரியகுமார் யாதவரிடம் பிடி கொடுத்து 69 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த டாம் லாதம் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த மார்க் சாப்மேன் 2 ஓட்டங்களில் வெளியேற களத்தில் அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 119 ஓட்டங்களில் 7 சிக்ஸர் , 9 பவுண்டரி என மொத்தம் 134 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்ப இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 327 ஓட்டங்கள் எடுத்து 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றுள்ளது.
இந்திய அணியில் முகமது ஷமி 7 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.