AI  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகக் கொள்முதலில் முறைகேடு! திமுக மீது தமிழக அமைச்சர் குற்றச்சாட்டு!

Meiveli Media Team


தமிழகத்தின் கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், கோவை மட்டுமன்றி திருச்சி, கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நூலகங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஊழல் தடுப்புப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியான எழுத்தாளர் பெயர்களையும் புத்தக உள்ளடக்கங்களையும் உருவாக்கி, அவற்றை நூலகங்களுக்குக் கொள்முதல் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, முன்னர் அறியப்படாத பல்வேறு எழுத்தாளர் பெயர்களில் உருவாக்கப்பட்ட 1,800க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், ஒரே பதிப்பகத்திடமிருந்து சுமார் 1,500 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நூலக நிர்வாகிகளின் பரிந்துரைகளைப் புறக்கணித்து புத்தகக் கொள்முதல் உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும், இதற்காகப் பல லட்சம் ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மாநிலம் முழுவதும் இடம்பெற்ற புத்தகக் கொள்முதல்களை ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் கல்வி நலனுடன் தொடர்புடைய இவ்விவகாரத்தில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர் ராஜ்மோகன், இதற்காக திமுக மாணவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">