🚨 அதிக மழையால் வீடொன்றின் மீது பாறைகள் சரிந்து விழுந்து சேதம் – 8 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் வெளியேற்றம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் (30) பெய்து வரும் கடும் மழையுடன், ஹாலிஎல, ஊதுவரை 7ஆம் மைல்கல், நவகொலனி பகுதியில் வீடொன்றின் மீது மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ள மேலும் 8 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பதுளை மாவட்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) அதிகாரிகள் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

