ஹெக்டர் அப்புஹாமி எம் பி யின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட எம் பி ஹெக்டர் அப்புஹாமி அரசாங்கம் இந்தியாவில் இருந்து இந்து மத தலைவர் ஒருவர் வந்த சந்தர்ப்பதில் அவருக்கு உயரிய அரச மரியாதை வழங்கப்பட்டது பௌத்த மத நிகழ்விற்காக தாய்லாந்தின் பதில் பிரதமரும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் இந்திய இந்து மத குருவிற்கு மாத்திரம் ஏன் அரச மரியாதை வழங்கப்பட்டது என கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் எந்த அரசும் அரச வைபவங்களில் யாரையும் இரண்டாம் தரமாக பார்ப்பதில்லை சகல மதத்தினையும் சமமாக அவர்களுக்கான மரியாதை ஏற்பாடு செய்து வருவதை நாங்களும் அவதானித்திருக்கிறோம். இந்த நிலையில் இப்புதிய அரசும் சகல மதங்களையும் சமமாக பார்க்கும் நோக்கில்தான் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ஆட்சியை கொண்டு செல்கின்றார். சகல மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றார் . இந்த நிலையில் ஹெக்டர் அப்புஹாமி எம் பி இந்திய இந்து மத குருவிற்கு கொடுத்த வரவேற்பை மத வேறுபாடு கொண்ட சிந்தனையில் விமர்சிப்பது மற்றும் மத காழ்ப்புணர்வுடன் மக்களுக்கு ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். இவர்களை போன்றோர்தான் இனங்களுக்கு இடையே மத வேறுபாடுகளை ஏற்படுத்தி பிளாவுகளை உருவாக்குபவர்கள். இவ்வாறான கருத்தை வெளியிட அனுமதிக்க முடியாது எனவும் குறித்த எம்பி யினால் வெளியிடப்பட்ட கருத்து கண்டனத்திற்குரியது எனவும் சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.