ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருக்க உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு தடை உத்தரவு – மனித உரிமைகள் ஆணைய நாட்டம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருப்பதற்குத் தடை விதித்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதற்குரிய பகுதிகளில் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை அடுத்து, ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த உத்தரவை பௌத்த பிக்குகளுக்கு சத்தமாக வாசித்துக் காட்டினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை உடைய பிக்குகள் அனைவரும் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, அவ்விடத்தை விட்டு அகன்ற அவர்கள், தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இதுகுறித்து முறைப்பாடு செய்வதற்காக நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

