மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழு போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினர் நேற்றைய தினம் இரவு கொழும்பு கோட்டை, தாமரை வீதியில் (Lotus Road) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
சுகாதாரத் துறையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக மீளாய்வு செய்து, காலியாகவுள்ள பணியிடங்களுக்கு புதிய நியமனங்களை விரைவுபடுத்துமாறு இதன்போது மாணவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ERPM பரீட்சை மோசடிகள் மூலம் நோயாளர்களின் உயிர்களுடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன், இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், தங்களால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவாக உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

