அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை இரத்துச் செய்வதற்குப் பங்களித்த சகலருக்கும் நன்றி! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவரசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக உழைத்த சகலருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சகல சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக நானும் எனது குழுவினரும் எம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் செய்தோம். அவரது உயிரைப் காப்பாற்ற முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர்பாக சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்திற்கும் மன்னருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.