முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (12 அக்டோபர் 2026) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைக்கு அமைவாக, அவர் தேசிய வைத்தியசாலையின் 62ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

