கோவில் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிர்ச்சி – வாழைச்சேனையில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் நேற்று இரவோடு இரவாக இடம்பெற்ற கோவில் வருடாந்த திருவிழாவின் போது, வானவெடி வெடித்து 13 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

கிரான் – குளக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

திருவிழாவின் போது சரியாக வெடிக்காத ஒரு வானவெடி, ஆபத்தில்லை என நினைத்து பிரதான இடத்திலிருந்து அகற்றப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட அந்த வானவெடியை சோதித்துப் பார்ப்பதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, அது எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.