தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல்: இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

தெஹிவளை, கவ்டான பகுதியிலுள்ள சிரிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை வேளையில் இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இச்சம்பவத்தில் காயமடைந்த 52 வயதுடைய நபர் உயிரிழந்த சிறுவர்களின் தந்தை எனத் தெரிவிக்கப்படுவதோடு, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




