தலைமன்னார் கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறித் தவித்த நபர் ஒருவர் இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 11) தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தினால், மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடல் பகுதியில் மணல் திட்டில் சிக்கித் தவித்த நபர் ஒருவர் அவதானிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபர் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் வந்து இவ்வாறு வழிதவறி சிக்கிய 17 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது.

அதற்கமைய, கடற்படையினரால் அவர் தம்மென்னா நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவசியமான குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.