யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர்.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

வசாவிளான் பகுதியில் தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில், வசாவிளான் பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடாக யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜர் கையளித்துள்ளனர்.

அதேவேளை தமது காணிகளை விடுவிக்குமாறு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே மயிலிட்டி பகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.