பேராதனை நகரில் கைபேசி கடையில் திருட்டு: CCTV காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராதனை நகரிலுள்ள கைபேசி விற்பனையகம் ஒன்றில், வாடிக்கையாளர்களைப் போல் வருகை தந்த இருவர் இரண்டு கைபேசிகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த மூடிய சுற்றுத் தொலைக்காட்சி (CCTV) கேமராவில் இத்திருட்டுச் சம்பவம் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கடமையிலிருந்த ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அங்கிருந்த இரு கைபேசிகளைத் திருடித் தப்பிச் செல்லும் காட்சிகள் அதில் காணப்படுகின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேராதனைப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர்களை அடையாளங் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.