ரூ. 12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம்: ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவரிடமிருந்து 12 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் ஏனைய புலனாய்வு நடவடிக்கைகள் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த மூன்று சந்தேகநபர்களும் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.