🚨 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊடாக 36 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பொதுமக்களின் பாரம்பரிய வழியைத் திறந்திடக் கோரி, கொம்மாதுறை மக்கள் இன்று அமைதியான சத்தியாக்கிரக மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாகுவதற்காக நிலங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கிய கொம்மாதுறை மக்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதது மிகவும் வேதனைக்குரியது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், Anura Kumara Dissanayake மாண்புமிகு பிரதமர் அவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள், ஏராவூர்பற்று பிரதேச செயலாளர், ஏராவூர்பற்று பிரதேச சபை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகிய அனைவருக்கும் பலமுறை கடிதங்கள் மற்றும் கோரிக்கைகள் வழங்கப்பட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் விரைவான, நியாயமான மற்றும் நிரந்தர தீர்வை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.