ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை – பல நாடுகளில் அவசர நிலை
Meiveli Media Team

ஐரோப்பா முழுவதும் தற்போது கடுமையான வெப்ப அலை ஒன்று தாக்கி வருவதால் பல நாடுகள் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை சாதாரண அளவை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் இந்த ஜூன் மாதத்தில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. Somerset பகுதியில் வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் France, Spain, Italy மற்றும் Germany ஆகிய நாடுகளிலும் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கடுமையான வெப்பநிலை காரணமாக பல இடங்களில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், போக்குவரத்து தாமதங்கள், ரயில் சேவைகள் பாதிப்பு மற்றும் சில பகுதிகளில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.France நாட்டில் சில அணு மின் நிலையங்கள் கூட அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நதிநீர் வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வானிலை ஆய்வாளர்கள் இந்த வெப்ப அலை இன்னும் சில நாட்கள் தொடரக்கூடும் என எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

