பாடசாலைகளுக்கிடையிலான கரம் சுற்றுப்போட்டி – வடக்கின் சம்பியனானது வேலணை மத்தி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான “கரம்” போட்டியில் யா/வேலணை மத்திய கல்லூரி 17 வயதுப் பிரிவு பெண்கள் கரம் அணி சம்பியனாகி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுத் துறையில் அதிகளவில் பிரகாசித்துவரும் தீவக பிரதேச மாணவர்களுக்கு இத்த வெற்றி மேலும் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களாக வேலணை மத்திய கல்லூரியின் கரம் அணி மூன்றாம் இடத்தினை பெற்றிருந்த நிலையில் மாணவர்களது விவேகம் மிக்க திறமையாலும், பாடசாலையின் அதிபர்
ஹஸ்ரன் றோயின் முழுமையான ஒத்துழைப்புடன் உடற்கல்வி ஆசிரியர் அனோஜனின் இடையறாத பயிற்சியின் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இதேவேளை கடந்த 13.06.2026 நடைபெற்ற வடமாகாண திறந்த கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பாக கலந்துகொண்டு ஒற்றையர் ஆட்டத்தில் வேலணை மத்திய கல்லூரியின் மாணவி ஜெ. விதுர்ஷினி வடமாகாண சாம்பியனாக மகு சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

