உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை சலேவுடன் நிறுத்தவே போராடுகிறார்கள்:  உண்மை ஓரிரு மாதங்களில் வெளிவரும் : நீதியமைச்சர் உறுதி

Meiveli Media Team


சுரேஷ் சலே மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என வலியுறுத்தினார். சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது யாரும் அவருக்காக போராட்டம் நடத்தவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னரே சிலர் சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். குண்டுத்தாக்குதலில் 278 பேர் கொல்லப்பட்டார்கள், 500 பேர் வரை படுகாயமடைந்தார்கள், இவர்கள் பற்றி ஒருசில ஊடகங்கள் பேசுவதில்லை எனத் தெரிவித்த அவர்,  சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பும் போது இராணுவத்தினர் பாதுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார்.   மேலும்இ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், விசாரணைகளை தடுக்க முயற்சிப்பவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் தெரிவித்தார்.குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான உண்மை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரும் திணறுபவர்களை பொருட்படுத்த போவதில்லை. மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்றார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">