11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

Meiveli Media Team

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து  தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில்,  கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.