ஈரானின் புதிய உச்ச தலைவர்  மொஜ்தபா காமேனியை சந்திக்க தயாராகும்  டிரம்ப்

Meiveli Media Team


அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கின.  அப்போது, அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த காலங்களில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.  தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேச ஆர்வம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், காமேனியே இறுதி ஒப்புதலை அளிப்பார் என்று நம்புகிறேன். அவரை விரைவில் சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  அயதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பின்னர், அவருடைய மகனான அயதுல்லா மொஜ்தபா காமேனிஇ ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">