மக்கள் சக்தி இயக்கம் : அண்ணாமலை ஆரம்பிக்கும் புதிய கட்சி : தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

Meiveli Media Team

தமிழக வெற்றிக் கழகம்  சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளன்று அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அவர் வெளியேறி, ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும், இதற்காக அவரது ஆதரவாளர்கள் கோவையில் அதிரடியாகப் போஸ்டர்களை ஒட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த புதிய முயற்சிக்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவளிப்பதாகக் கூறி, அவரது புகழ்பெற்ற ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்ற மாஸ் வாசகம் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த திடீர் திருப்பமானது ஆளுங்கட்சியான தவெக-வை வலுவாக எதிர்க்கவும், அதன் வாக்கு வங்கியைப் பிரிக்கவும் பாஜக பின்னணியில் இருந்து இயக்கும் ஒரு ‘பி டீம்’  திட்டமாக இருக்கலாமோ என்று அரசியல் விமர்சகர்கள் மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.