குடியேற்ற விதிகளில் மாற்றம் : சார்பு விசாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்

Meiveli Media Team

பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமைய பெற்றோர்கள் சட்டபூர்வ அனுமதி கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாகள் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் 5 குழந்கைளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இங்கிலாந்தில் சட்டபூர்வமாக வசித்து வரும் ஐந்து வயது குழந்தைகள் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராமரிப்பு பணியாளர் விசாவில் பிரித்தானியாவிற்கு வந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெற்றோருக்கு 2031 வரை தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த வருணி ஆராச்சிகே, என்பவர் தெரிவிக்கும் போது,  ‘நாங்கள் 2022 முதல் சட்டபூர்வமாக வாழ்கிறோம். வரி செலுத்துகிறோம். ஆனால் என் குழந்தைகளும் கணவரும் வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.   அண்மை வாரங்களில் இதுபோன்ற விசா வழக்குகள் அதிகரித்து வருவதாக  குடியேற்ற சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், குடியேற்ற பராமரிப்பு பணியாளர்கள் நிரந்தர குடியுரிமை பெற வேண்டிய காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தும் அரசின் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பெருமளவிலான பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளித்த உள்துறை அமைச்சகம், ‘பிரிட்டனுக்கு பங்களிப்பு செய்யும் நபர்களை வரவேற்கிறோம். ஆனால் குடியேற்ற முறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும். இங்கு நிரந்தரமாக குடியேறுவது உரிமை அல்ல, அது சம்பாதிக்க வேண்டிய ஒரு சிறப்புரிமை’ என்று தெரிவித்துள்ளது.