நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல: அரசாங்கத் தரப்பு அதிகாரி தொவிப்பு
Meiveli Media Team

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது, தேர்தல் வாக்குறுதியாக இருந்தபோதிலும், தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல என்று சிரேஷ்ட அரசாங்கத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி , ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தனது தேர்தல் தேர்தல் அறிக்கையில், தற்போதைய அரசியலமைப்பை நீக்கிவிட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தது. இந்தநிலையலி; ஓடகம் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதிலும், அது தற்போதைக்கு முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். இது எங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் எங்களால் இதற்கு முன்னுரிமை அளிக்க முடியாதுஇ’ என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், தனது தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுஇ பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதிப் பரிந்துரைகளை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

