மீகொடையில் பாரிய விபத்து..! ஆறு பேர் பலி…

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மீகொடை பகுதியில் வெசாக் அன்னதான தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 13 பேர் தீவிர சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

சம்பவத்தில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெப் ரக வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில் மீகொடை சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கெப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் ஓட்டுநர், விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுநரை மீகொடை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.