Small Drops மற்றும் International Children’s Peace Network நடத்தும் தென் ஆசிய நாடுகளுக்கிடையே அமைதி, ஒற்றுமை மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சர்வதேச மாநாடு

தென் ஆசிய நாடுகளுக்கிடையேயான அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் “Voices for Peace and Harmony” என்ற சர்வதேச கருத்தரங்கு, வரும் 2026 ஜூலை 5ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது.
மெய்வெளி தொலைக்காட்சி ஊடக அனுசரணையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, Wembley பகுதியில் அமைந்துள்ள Crystal Events Management அரங்கில் நடைபெறவுள்ளது. “Small Drops” மற்றும் “International Children’s Peace Network” இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், SAARC நாடுகளைச் சேர்ந்த சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
அமைதி உருவாக்கம், ஜனநாயக பங்கேற்பு, குடிமக்கள் உரிமைகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட கொள்கைகள் குறித்து பல்வேறு அமர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதிநிதிக் குழுவில், இந்திய அரசின் முன்னாள் செயலாளர் டாக்டர் கமல் டாவரி ஐஏஎஸ் (ஓய்வு), Ozogreen Infra Projects நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஸ்ரீகுமி தர்மன் விஜயன், டாக்டர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், சட்டம் மற்றும் சமூக நல்லிணக்க துறையில் செயல்பட்டு வரும் டாக்டர் பிரதீப் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு ஆகியோரின் பங்கேற்பும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு, தென் ஆசிய நாடுகளுக்கும் வெளிநாடுகளில் வாழும் தென் ஆசிய சமூகங்களுக்கும் இடையே புரிதல் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய தளமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

