ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்
Meiveli Media Team

ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து நடைபெறும் போர், இழப்புக்கான காரணங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பல் வேறு காரணிகளால் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரின் செலவு, ஏற்கெனவே சுமார் 29 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டதாக வும் இந்தச் செலவு அதிகரிப்பில் பெரும் பகுதி, ராணுவ உபகரணங் களை சீரமைக்க அல்லது மாற்றுவதற்கான செலவாகும் என்று பென்டகன் தெரிவித்தது.
போர் இழப்புகள் குறித்த விரிவான மதிப்பீட்டை அமெரிக்க பாதுகாப்புத்துறை இது வரை வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் அதன் குழுக்களுக்கு கொள்கை மற்றும் சட்டரீதியான பகுப்பாய்வுகளை வழங்கும் சிஆர் எஸ் அமைப்பானது, செய்திகள் மற்றும் அமெரிக் கப் பாதுகாப் புத் துறை, அமெரிக்க மத் திய கட் டளைப் பிரிவு ஆகியவற் றின் அறிக் கைகளை ஆய்வு செய்து இந்த இழப்பு விவரத்தை தொகுத் துள் ளது.
ஈரானுக்கு எதி ராக இஸ் ரேலும் அமெரிக்கா வும் கடந்த பிப் ர வரி 28ம் தேதி போரை தொடங் கின. இதில் ஈரானின் உச்ச தலை வர் கமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

