வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவீக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதாகவும்
ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகிமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.