ஜெனீவாவில், உலக சுகாதாரத் தலைவர்கள் குழந்தைப் பருவ புற்றுநோயாளிகளின் உயிர் வாழ்வதற்கான விகிதத்தை 2030க்குள் 60% ஆக உயர்த்த உறுதிமொழி எடுத்துள்ளனர்.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் குழந்தைகளுக்கு முழுமையான வாழ்வை வழங்குவது அனைவரின் பொறுப்பாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 79வது உலக சுகாதார பேரவையை உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர். திரு. டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Dr. Tedros Adhanom Ghebreyesus தலைமையில் 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்புடன் நேற்று (18) உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமாகியது.

டொமினிகன் குடியரசின் டாக்டர் விக்டர் எலியாஸ் அட்டல்லா லாஜாம் சுகாதார மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் நாடான சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Elisabeth Baume-Schneider சுகாதார மாநாட்டில் உரையாற்றினார், அதன் பின்னர் கானாவின் ஜனாதிபதியும் சிறப்பு விருந்தினருமான மேதகு ஜோன் டிராமணி மஹமகே மற்றும் பலர் தங்கள் கருத்துக்களை இங்கு தெரிவித்தனர்.
“ஆரோக்கியத்திற்காக ஒரு உலகம்” “One world for Health”என்ற தொனிப்பொருளில் ஆரம்பமான 79வது உலக சுகாதார சபையுடன் (WHA79) இணைந்து, WHO Global Initiative for Childhood Cancer – WHO GICC ஏற்பாடு செய்த விசேட அமர்வு நேற்று (18) ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
“உயிர்வாழ்வை அளவிடுதல், முன்னேற்றமான மாற்றம் – குழந்தை பருவ புற்றுநோய்க்கான WHO உலகளாவிய முன்முயற்சியின் மூலம் சமபங்கு முன்னேற்றம்” “Measuring survival, driving change – Advancing equity through the WHO Global Initiative for Childhood Cancer” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அமர்வின் முக்கிய நோக்கம், 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தது 60% ஆக அதிகரிப்பதாகும்.
“உயிர்வாழ்வை அளவிடுதல், முன்னேற்றமான மாற்றம் – “Measuring survival, driving change”குழந்தை பருவ புற்றுநோய்க்கான WHO உலகளாவிய முயற்சியின் மூலம் முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அமர்வின் முக்கிய நோக்கம், 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தது 60% ஆக அதிகரிப்பதாகும்.


இந்த அமர்வில், உலக சுகாதார நிறுவனம் குழந்தைப் புற்றுநோயின் சமீபத்திய உலகளாவிய அறிக்கையான ” உயிர்வாழ்வை அளவிடுதல், முன்னேற்றமான மாற்றம்’ “Measuring survival, driving change”வெளியிடுவதாக அறிவித்தது, மேலும் உலகில் முதன்முறையாக, குழந்தைப் பருவம் மற்றும் இளம்பருவ லிம்பாய்டு லுகேமியா (lymphoid leukaemia ) ஆகியவற்றிற்கான 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் நாடுகளை மையப்படுத்தி இந்த அறிக்கையால் மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே இருக்கும் தரவு அமைப்புகள் மற்றும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளில் உள்ள இடைவெளிகளை இது தெளிவாகக் காட்டுகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டின் தலைவரும், இலங்கையின் சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, நேற்று (18) பிரதான மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற அமர்வில் உரையாற்றினார்.
ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமர்வில் உரையாற்றிய அமைச்சர், குழந்தைப் பருவப் புற்றுநோயில் வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பது எத்தனை குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன என்பதில் மட்டுமல்ல, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்றும், புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். குழந்தைப்பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான வாழ்நாள் முழுவதற்குமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்றும், உலக சுகாதார அமைப்பு, சர்வதேசப் பங்காளிகள், சுகாதார வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்களுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும், மேலும், “அனைவருக்கும் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பானது, புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றுக்கான சேவைகளை சமமாக முன்னெடுப்பதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குழந்தைப் பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு, மருத்துவமனைகளுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், ஆரம்ப சுகாதார சேவைகள், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான பராமரிப்பின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள், நாளமில்லா சுரப்பிகள், கற்றல் சிரமங்கள், மனநலப் பிரச்சினைகள், இனப்பெருக்க சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் போன்ற நீண்டகால மற்றும் தாமதமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும், இந்த சவால்களை எதிர்கொள்ள பலதரப்பட்ட, நோயாளிகளை மையமாகக் கொண்ட மற்றும் வாழ்நாள் முழுவதும் அணுகுமுறைகள் தேவை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, குழந்தைப் புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட பின்தொடர்தல் சேவைகளை வலுப்படுத்துவதற்கு, குழந்தைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் இலங்கை செயல்பட்டு வருகிறது.
சமூக சுகாதார அமைப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மருத்துவ அதிகாரி சுகாதார சேவைகள், பொது சுகாதார தாதியர் சேவைகள், சமூக மட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார திட்டங்கள் மற்றும் ஆரோக்யா நலன்புரி நிலையங்கள் என்ற புதிய திட்டம் மூலம் உயிர் காக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவை வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமூக அளவிலான சுகாதாரக் கல்வி, உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து மேலும் பரிசீலிக்கப்படும் என்றும், டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் சுகாதார தகவல் அமைப்புகள் இந்த முயற்சியில் மிகவும் முக்கியமானதாகி வருவதாகவும் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் குழந்தைப் பருவ புற்றுநோய் தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், உயிர்காப்பு, சுகாதார பேதங்களைக் குறைத்தல் மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியமான வழிகாட்டல்களை இந்தத் திட்டம் வழங்குகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்த உலகளாவிய வேலைத்திட்டமானது, இலங்கையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், தரப்படுத்தப்பட்ட சிகிச்சை, மனிதவள அபிவிருத்தி, சிறந்த சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட WHO GICC திட்டம், தற்போது உலகம் முழுவதும் 87 நாடுகளில் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 50 நாடுகள் தங்கள் தேசிய சுகாதார உத்திகளில் குழந்தைப் பருவப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டை உள்ளடக்கி இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உட்பட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.