தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – 60% ஆக உயர்வு அறிவிப்பு

Meiveli Media Team


தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி 60% ஆக உயர்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,230 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">