பேராதனை பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் பேராசிரியருக்கு வாழ்நாள் தடை

Meiveli Media Team


பேராதனை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு அந்தப் பல்கலைக்கழகத்தின் செனட் சபைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தினுள் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்னவிடம் முதுதத்துவமாணி பட்டத்தைப் பயின்று வந்த அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் தர விரிவுரையாளர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை அறிவித்த போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீதி மற்றும் சமத்துவ அதிகாரத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம், பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்ன பல்கலைக்கழகக் கட்டமைப்பிலோ அல்லது ஏதேனும் உயர்கல்வி நிறுவனங்களிலோ எந்தவொரு பதவியையும் அல்லது கௌரவப் பதவியையும் வகிப்பதைத் தடை செய்தது. இது தொடர்பான உத்தரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">