அமெரிக்கா – சீனா நேருக்கு நேர் போட்டி: 11 வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது

Meiveli Media Team

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் மே 14 மற்றும் 15 தேதிகளில் பெய்ஜிங்கில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு, அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக வர்த்தக உறவுகள் குறித்து பேசப்பட உள்ளது. உலகின் இரண்டு பெரிய சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பொருளாதாரம், இராணுவம், வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தது. ஆனால் தற்போது சீனா உலகின் “உற்பத்தி மையம்” எனக் கருதப்படுகிறது. இன்று சீனா ஆண்டுக்கு சுமார் 3.59 டிரில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யும் அதேவேளை அமெரிக்கா சுமார் 1.9 டிரில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்வதும் இப்போது உலகின் 145 நாடுகள் அமெரிக்காவை விட சீனாவுடன் அதிக வர்த்தகம் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.