நல்லூரில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

Meiveli Media Team

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இதனை முன்னிட்டு வடக்கு பகுதியில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.நிகழ்வின் தொடக்கமாக நினைவு ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், நல்லூர் பின் வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக “முள்ளிவாய்க்கால் கஞ்சி” தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசியப் பேரவையினர் உள்ளிட்டோர் தனித்தனியாக இந்த நிகழ்வில் ஈடுபட்டனர். அதேவேளை, முள்ளிவாய்க்காலின் வலி நிறைந்த நினைவுகளை தாங்கிய நினைவு ஊர்தி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுவதும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பொ. ஐங்கரநேசன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.