குடும்ப நல சுகாதார சேவைகள் துறைக்கு 100 ஆண்டுகள்! ஆனால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அவ்வாறே காணப்படுகின்றன: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

குடும்ப நல சுகாதார சேவைகள் துறைக்கு இன்று 100 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யும் இத்துறையில் தீர்க்கப்படாத பல குறைபாடுகள் அவ்வாறே காணப்பட்டு வருகின்றன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.
தமது சேவைக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமை, சேவையை உயர் மட்ட தரத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான கொடுப்பனவுகள், உபகரணங்கள், வாகனங்கள் போன்றவை கூட இவர்களுக்கு போதியளவில் இல்லாமல் இருக்கின்றன. இதனால் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஆற்றும் சேவைக்கு நன்றி பாராட்டுகிறோம்.
சமூகத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், தாய்மார்களுக்கும் ஆற்றி வரும் சிறப்பான சேவைக்கு உயரிய மதிப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தற்போது 8,000 க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் பணியாற்றி வந்தாலும், குடும்ப நல சுகாதாரத் துறையை மேலும் மேம்பட்டதாகவும், வினைத்திறன் வாய்ந்ததாகவும் ஆக்குவதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இத்துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.
நூறு ஆண்டுகால அரும்பணியை நிறைவுசெய்யும் இந்த தருணத்தில், நோய் எதிர்ப்பாற்றல் மேம்பாட்டிலிருந்து குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதத்தைக் குறைப்பது வரையில் பெற்றுத் தரும் சிறப்பான சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்து காணப்படுகின்றன. இதற்காக நான் இவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் தொழில் திருப்தியை மேம்படுத்துவதற்கு இதைவிட கூடிய அரசின் தலையீடு இங்கு முக்கிய அம்சமாக காணப்படுகின்றன. குடும்ப நல சுகாதாரத் துறைக்கு இதைவிட அதிக அக்கறையை காட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தார்.

