சென்னையில் ரூ. 3.58 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Meiveli Media Team

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் சென்னையில் இன்று மிகப்பெரிய சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றைத் தவிடுபொடியாக்கிய NCB அதிகாரிகள், ஒரு Container Lorry இல் இருந்து 717 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3.58 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த போதைப்பொருள் ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இது தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததும், இதில் இலங்கையுடன் தொடர்புடைய கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது