மாணவ மாணவியர்களுக்கு ஒரு யூரோ மதிய உணவுத்திட்டம்: பிரான்சில் ஆரம்பம்
Meiveli Media Team

பிரான்சிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ மாணவியர்களில் பணப்பிரச்சினை காரணமாக 48 சதவிகித மாணவ மாணவியர் மதிய உணவு சாப்பிடாமல் இருப்பது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அதேபோல, 23 சதவிகித மாணவர்கள் ஒரு மாதத்தில் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.மாணவ மாணவியரின் கஷ்டத்தைப் போக்குவதற்காக, அனைத்து மாணவ மாணவியருக்கும் தினமும் ஒரு யூரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்துள்ளன. முன்பு, மதிய உணவின் விலை 3.30 யூரோக்கள். நான் ஒரு மாதத்துக்கு சுமார் 20 முறை சாப்பிட வருவேன். அதற்கு எனக்கு 60 யூரோக்கள் செலவானது. இனி எனக்கு வெறும் 20 யூரோக்கள்தான் செலவு என 18 வயது மாணவர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

