செம்மணி….
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதை வழக்கின் மூன்றாம் கட்டத்தில் 9.ம் நாளான நேற்றைய தினம் (6) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் தெரிவித்தார்.
இதுவரை 252 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் புதிதாக மனித மண்டை ஓட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

