ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.தேர்தல் முடிவுகளுக்கு பின் வெடித்த மோதல்.
Meiveli Media Team

கேரளா தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தபோது தேர்தல் ஆணையத்தைப் புகழும் ராகுல் காந்தி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பின்னடைவைச் சந்தித்ததும் அதே ஆணையத்தைக் குறை கூறுவது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்த நிலையில், தோல்வி பயத்தாலேயே அவர் இப்படிப் பேசி வருகிறார் என பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘இந்தியா’ (INDIA) கூட்டணி சிதறிப் போய்விட்டதாகவும், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பதும் இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளதாகப் பா.ஜ.க விமர்சித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, தங்கள் கூட்டணியின் தோல்விக்கான காரணங்களை ராகுல் காந்தி ஆராய வேண்டும் எனவும் பா.ஜ.க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

