​வானிலை எச்சரிக்கை: பலத்த இடி மின்னலின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த இடி மின்னல் தாக்கங்கள் குறித்து வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்த ஜெயசேகர அவர்கள் பொதுமக்களுக்கு விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பலத்த இடி மின்னல் நிலவும் சந்தர்ப்பங்களில் வெட்டவெளிகளிலும் ஏனைய வெளி இடங்களிலும் தங்கியிருப்பது உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மிகவும் அபாயகரமான செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இத்தகைய காலப்பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்ட பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு, பயணங்களில் ஈடுபடுபவர்கள் இடி மின்னல் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூடிய நிலையில் உள்ள வாகனங்களுக்குள் தங்கியிருப்பது பாதுகாப்பானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இந்த வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி மின்னல் அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.